என் மகனே உனக்காக ஏங்குகிறேன். என் மகனே உனக்காக பரிதவிக்கிறேன் .என் மகனே உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் .என் மகனே என் இதயத்தின் வலியை வேதனையை கவலையை நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாயே அதை உனக்கு புரியவைக்க என்னையே சிலுவை மரத்துக்கு ஒப்புக்கொடுத்து கொடிய வேதனை அனுபவித்து எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன் .நான் எனது மனதில் உன்னை இழந்ததால் எனது மனதும் இப்படியே ஒவ்வொரு கணபொழுதிலும் கிழிக்கபட்டு கொண்டிருக்கிறது .இந்த வலி வேதனையை எத்தனையோ தீர்க்கதரிசிகள் வாயிலாக பலமுறை கூறினேன் .நீயோ அவர்களை தூசித்தாய் கேலி செய்தாய் ,அவமதித்தாய் ,துன்புறுத்தினாய் ஏன் கொலையும் செய்தாய் .இறுதியாக உனக்கு புரிய வைக்க நானே இறங்கி வந்தேன் உவமைகள் வழியாக பேசினேன் .நீ உன் மூதாதையர் போல என்னையும் கேலி செய்தாய் .அவமரியாதை செய்து துன்புறுத்தினாய் .இறுதியாக சிலுவையில் என்னை கொலை செய்தாய் .நீ எனக்கு செய்த அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அதை நன்மையாக மாறினேன் .உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை அனைத்து மனிதர்களும் காண மிகவும் கேவலமாக அசிங்கமாக பயங்கர மரணத்தை இஸ்ரவேல் தேசத்தில் நான் அன்று இறந்தது எதற்காக நீ என் தண்டனைக்கு தப்பி நீ என்னுடன் எனது இரட்சியத்தில் நித்திய நித்தியமாக என் கூடவே இருக்க வேண்டும் என்ற ஒரே காரணமே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை .நீ செய்ய வேண்டியது எல்லாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யேசுவே நான் உம்மை மனபூர்வமாக சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் .நீர் எனக்காக 2000 ஆண்டுகளிற்கு முன் மரித்ததை ஏற்றுக்கொள்கிறேன் .அதற்காக நன்றி .நான் உமக்காக என்ன செய்ய வேண்டும் எனக்கு கற்பியும் ஆமேன் . என்று மட்டும் சொல் நான் உனக்கு சகலத்தையும் போதிப்பேன்
Showing posts with label அதிகாலை. Show all posts
Showing posts with label அதிகாலை. Show all posts
Thursday, March 2, 2017
Friday, September 25, 2015
Friday, April 10, 2015
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற
jesus victor
10:42 AM
அதிகாலை, அதிசயம், அபிஷேகம், அறிவியல் elokim, அனுபவிக்க, அன்பு, ஆசீரும், ஆவிக்குரிய
No comments
உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் இந்த உலகை ஜெயித்து விட்டார்
மனுகுலத்தை மீட்ட இறைவன் கல்லறைவிட்டு உயிர்த்துவிட்டார்
அலகையின் பிடியில் இருள் சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
ஒளி வீசும் விடியலால் ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு பலர் ஏளனம் மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய் உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில் உரம் பெற உயிர்த்துவிட்டார்
Monday, February 25, 2013
தேவனின் இரக்கம் தேவனின் மன்னிப்பு வெளிப்பட்ட நாள் இன்றே
jesus victor
4:11 AM
Orthodox, அதிகாலை, அற்புதத்தை, இரக்கம், செபிக்கும், தேவனின, நினிவே, யோனா, விளக்கங்கள்
No comments
இன்று தேவனின் இரக்கம் தேவனின் மன்னிப்பு வெளிப்பட்ட நாள் இன்றே. இன்றே நினிவேயின் மக்கள் உபவாசித்து செபித்து தேவனிடமிருந்து மன்னிப்பை பெற்று கொண்டது இன்றைய நாளே. இதனை நினைவு கூறும் முகமாக Orthodox கிறிஸ்த்தவர்கள் இன்றிலிருந்து மூன்று நாட்கள் செபித்து வருகின்றனர்;.இறைவனது கிருபையால் நானும் இன்று அதிகாலை அவர்களுடன் செபிக்கும் பாக்கியம் பெற்றேன். நீங்களும் இன்று உங்களது பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டு அற்புதத்தை பெற்றுகொள்ளுங்கள்;
காண்க வேதத்தில்
யோனா 3
3 பிறகு கர்த்தர் யோனாவிடம் மறுபடியும் பேசினார். கர்த்தர், 2 “அந்த பெரிய நினிவே நகரத்திற்குப் போ, நான் உனக்குச் சொன்னவற்றைப் பிரசங்கம் செய்” என்றார்.
3 எனவே யோனா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான், அவன் நினிவே நகரத்திற்குப் போனான். நினிவே ஒரு மிகப்பெரிய நகரம். ஒருவன் இந்நகரத்தைக் கடந்துபோக மூன்று நாட்கள் நடக்க வேண்டும்.4 யோனா நினிவே நகரத்தின் நடு இடத்திற்குச் சென்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான். யோனா, “40 நாட்களுக்குப் பிறகு நினிவே நகரம் அழிக்கப்படும்!” என்றார்.
5 நினிவேயின் மக்கள் தேவனிடமிருந்து வந்த செய்தியை நம்பினார்கள். மக்கள் சாப்பிடாமல் உபவாசம் இருந்து அவர்களின் பாவங்களை நினைத்து மனந்திரும்ப முடிவு செய்தார்கள். மக்கள் சிறப்பான ஆடையை அணிந்து தங்கள் மன வருத்தத்தைக் காட்டினார்கள். அந்நகரிலுள்ள மக்கள் அனைவரும் இதனைச் செய்தார்கள். மிக முக்கியமான மக்களும், முக்கியமற்ற மக்களும் இதனைச் செய்தார்கள்.
6 நினிவேயின் அரசன் இவற்றைக் கேள்விப்பட்டான், அரசனும் தான் செய்த தீங்குகளுக்காக வருத்தப்பட்டான், எனவே அரசன் தனது சிம்மாசனத்தை விட்டு இறங்கினான். அரசன் தனது அரசனுக்குரிய ஆடையைக் கழற்றிப் போட்டுவிட்டு துக்கத்தைக் காட்டுவதற்குரிய சிறப்பு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு அரசன் சாம்பல்மேல் உட்கார்ந்தான், 7 அரசன் ஒரு சிறப்புச்செய்தியை எழுதி நகரம் முழுவதற்கும் அனுப்பினான்.
அரசனிடமிருந்தும் அவனது முக்கிய மந்திரிகளிடமிருந்தும் வரும் கட்டளை:
கொஞ்ச காலத்திற்கு எம்மனிதனும் மிருகமும் உண்ணக் கூடாது. மாடுகளும் ஆடுகளும் கூட வயலுக்குப் போகக்கூடாது. நினிவேயில் வாழ்கிற எதுவும் உணவு உண்ணவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. 8 ஆனால் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் துக்கத்தைக் காட்டும் சிறப்பு ஆடையால் தன்னை மூடிக்கொள்ள வேண்டும். மக்கள் தேவனிடம் உரக்கக் கதறவேண்டும். ஒவ்வொருவரும் தனது வாழ்வை மாற்றித் தீங்கு செய்வதை நிறுத்த வேண்டும். 9 பிறகு தேவன் மனம் மாறி தாம் திட்டமிட்ட செயல்களைச் செய்யாமல் விடலாம். தேவன் ஒருவேளை தன்னை மாற்றிக்கொண்டு நம் மீது கோபமில்லாமல் இருக்கலாம். அப்போது நாம் தண்டிக்கப்படாமல் இருக்கலாம்.
10 தேவன் மக்கள் செய்தவற்றைப் பார்த்தார். மக்கள் தீமைகள் செய்வதை நிறுத்தியதைப் பார்த்தார். எனவே தேவன் மாறித் தனது திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. தேவன் மக்களைத் தண்டிக்கவில்லை.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Popular Posts
-
வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி
-
சென்ற இடுகையில் இந்தியாவில் தனது நற்செய்தியை அறிவிக்க தேவன் தெரிந்தது கொண்ட மொழி தமிழ் மொழி என்பதால் நமக்கெல்லாம் பெருமை. இந்தியா என்றால் இ...
-
துன்ப துயரங்கள் ஒரு சில மனிதர்களை தொடர்ந்து சங்கிலி தொடர் போல தாக்கும் இவ்வேளையில் தேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்தேன் என...
-
இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்
-
மூப்பது முக்கோடி தெய்வங்ளா ? ஒரே ஒரு யேசுவா பெரியவர் ?
-
“இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எ...

.jpg)