Saturday, November 3, 2012
Monday, October 1, 2012
உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.
jesus victor
4:40 AM
tamils of srilanka, war, war crime, இலங்கை தமிழ், ஐநா சபை, தீர்கதரிசனம், நிரந்தர சமாதானம், ஜேசு சாமி
No comments
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபையும் இந்தியாவை ஆளும் அரசும் ஏன் உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்தது என இலங்கை அரசு அறிவித்ததும் அனைத்து நாடுகளும் இலங்கை அரசை புகழ்ந்ததுடன் இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவுகின்றது எனவும் இலங்கை தமிழர் மிக சந்தோசமாக வாழ்கின்றனர் என கூறிவருகின்றனர் .ஆனால் அங்கோ ஐந்து தமிழருக்கு ஒரு இராணுவம் என கண்காணிக்க படுவதுடன் பல அடக்குமுறை இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த உண்மை . அதானால் தான் அன்று ஜேசு கூறினார்
யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உ ங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
இவ் வசனத்தின் இறுதில் உலகம் கொடுக்கிறபிரகாரம் நான்உங்களுக்குக் கொடுக்கிறதில்லை என்று ஜேசு அன்று கூறியது மிக சரியனதே. உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது. எனவே சமாதானத்தின் இறைவனிடம் இலங்கை தமிழர் விடயத்தில் மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவும் தமிழர்கள் மன விருப்பத்தின் படி நிலையான சமாதானம் கிடைக்க வேண்டுவோம்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
ஜெபத்தோட்ட ஜெயக்கீதங்கள் vol 13 இல் இருந்தது
கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழ வேண்டுமே
இரங்கும் ஐயா மனம் இரங்குமையா
1. துப்பாக்கி ஏந்தும் கைகள்- உம்
வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்
2. பழிக்கு பழி வாங்கும்(எபி 10:30)
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை (எபே4:32)
தேசத்தில் மலர வேண்டும்
3. பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்
4. வீடு இழந்தவர்கள்
இடங்கள் பெயர்ந்தவர்கள்
மறுவாழ்வு பெற வேண்டும்
மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்
Monday, September 24, 2012
அனைத்து கிறஸ்தவ தொலை கட்சியை காண
அனைத்து கிறிஸ்தவ தொலை கட்சியை ஒரே தளத்தில் காண அத்துடன் தமிழில் வேதாகமத்தை வாசிக்க
இலங்கை தமிழ் கத்தோலிக்க தொலைக் காட்சியை காண http://www.tcnlnet.com/tcnl-tv.html
Sunday, September 16, 2012
நரகத்தின் வாசல் இதுதானோ ?
சொர்கத்தின் வாசல் படி, என்ற சொல்லைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சொர்க்கம் என்றால் அது வானத்தில் அல்லது இந்திரலோகத்தில் இருப்பதாக பலரும் கூறுவார்கள். ஆனால் பூமியில் ஒரு நரகத்தின் வாசல் படி பலகாலமாக இருக்கிறதே யாராவது அறிவீர்களா ?
ஆம் இதனை ஆங்கிலேயர், நரகத்தின் வாசல் என்று அழைக்கிறார்கள். டேக்மேனிஸ்தான் (அக்பானிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடு) என்னும் நாட்டில் உள்ள கராக்கும் என்னும் பாலைவனத்தில் இந்த நரகத்தின் வாசல் காணப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரெனத் தோன்றிய இந்தத் துளையில்(ஓட்டையில்) இருந்து எப்போதும் தீ பிளம்பு கக்கியவண்ணம் உள்ளது. இது எரிமலை அல்ல. எப்போதும் எரிந்துகொண்டு இருக்கும் இந்த ஓட்டையின் ஆழத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அதனுள் எரியும் நெருப்பு ! உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக இதனை ஏன் இன்னும் இணைக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு , இது அமைந்துள்ளது.




நரகத்தை பற்றி இறைவன் தளத்திலிருந்து
ஆம் இதனை ஆங்கிலேயர், நரகத்தின் வாசல் என்று அழைக்கிறார்கள். டேக்மேனிஸ்தான் (அக்பானிஸ்தானுக்கு அருகில் உள்ள நாடு) என்னும் நாட்டில் உள்ள கராக்கும் என்னும் பாலைவனத்தில் இந்த நரகத்தின் வாசல் காணப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் திடீரெனத் தோன்றிய இந்தத் துளையில்(ஓட்டையில்) இருந்து எப்போதும் தீ பிளம்பு கக்கியவண்ணம் உள்ளது. இது எரிமலை அல்ல. எப்போதும் எரிந்துகொண்டு இருக்கும் இந்த ஓட்டையின் ஆழத்தை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் அதனுள் எரியும் நெருப்பு ! உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக இதனை ஏன் இன்னும் இணைக்கவில்லை என்று நினைக்கும் அளவுக்கு , இது அமைந்துள்ளது.
நரகத்தை பற்றி இறைவன் தளத்திலிருந்து
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
Thursday, August 30, 2012
உனக்கு உதவி செய்யும் தெய்வம்
jesus victor
8:52 AM
அற்புதத்தை, ஆறுதல், இறைஞ்சி, உதவி, கைவிடுவதில்லை, நன்மை, விளக்கங்கள்
No comments
வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான கஷ்டங்கள் துன்பங்கள் அனைத்தையும் உனக்காக அநுபவித்து உன் கூடவே வரும் ஒரே ஒரு தெய்வம் ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை நான் உன்னை கைவிடுவதும் இல்லை’ (எபி.13:5).
Tuesday, August 14, 2012
ஆணில் இருந்து பெண் ?
jesus victor
7:34 AM
XX, XY, அறிவியல், ஆணின், கடவுள், குரோமோசோம், குழந்தைகளை, பெண்ணை, விளக்கங்கள்
No comments
மனிதன் தோற்றம் தொடர்பாக பலவிதமான கொள்கைகள் காணப்படுகின்றது. இக்கொள்கைகளில் கூர்ப்புக் கொள்கை இன்று பலராலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் சிறப்புப்படைப்புக் கொள்கையாகிய கத்தர் உலகத்தை படைத்தார் என்ற கொள்கை இன்று வரை நிராகரிக்கபடவில்லை சரி படைப்பு கொள்கையை அறிய வேதாகமத்தை புரட்டினால் படைப்பு தொடர்பாக இரண்டுவிதமாக உள்ளது. விளங்கிக் கொள்ள சிரமம் என்பது உண்மையே என்றாலும் வேதாகமத்தில் எழுதப்பட அனைத்துக்கும் ஏதாவது ஓரு மறை பொருள் உண்டு .சில மாதங்களின் முன்னர் நான் தாய் போல் மதிக்கும் ஓரு அம்மையாரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரிடம் படைப்பு சம்பந்தமாக உரையாடியபோது அதில் ஆதாமின் விலா எலும்பில் இருந்து எப்படி ஏவாழை உருவாக்க முடியும்?? இது சாத்தியப்படாது என்றேன் . அந்த அம்மையார் புன்னகையுடன் பதில் அழித்தார்.
இரண்டாம் அதிகாரம்: கர்த்தர் ஆதாமை உருவாக்கி அவன் தனியாய் இருப்பது நல்லதல்ல என்று கருதி அவன் விலா எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கினார்
18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்
22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
ஆதியில் ஆணின் குரோமோசோம் XX ஆக இருந்து .
கடவுள் ஆணின் குரோமோசோமின் ஒரு பகுதியை எடுத்தார் ஆதலினால் XX ஆக இருந்த ஆணின் குரோமோசோம்
XY மாறிவிடது ஆணின் குரோமோசோமின் ஒரு பகுதியில் இருந்தது கடவுள் பெண்ணை XX ஆக உருவாக்கினார்.எனவே பெண்ணே குழந்தைகளை பிரசவிக்க வேண்டியுள்ளது. என்றார் நான் ஆச்சரிம் அடைந்தேன் .
ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 11:12
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
Sunday, August 5, 2012
Popular Posts
-
வல்லமையின் வரத்தை தேவனிடம் இருந்து பெறுவது எப்படி
-
சென்ற இடுகையில் இந்தியாவில் தனது நற்செய்தியை அறிவிக்க தேவன் தெரிந்தது கொண்ட மொழி தமிழ் மொழி என்பதால் நமக்கெல்லாம் பெருமை. இந்தியா என்றால் இ...
-
துன்ப துயரங்கள் ஒரு சில மனிதர்களை தொடர்ந்து சங்கிலி தொடர் போல தாக்கும் இவ்வேளையில் தேவன் ஏன் என்னை கைவிட்டார் .நான் என்ன பாவம் செய்தேன் என...
-
இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்
-
மூப்பது முக்கோடி தெய்வங்ளா ? ஒரே ஒரு யேசுவா பெரியவர் ?
-
“இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எ...



